மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

மாலத்தீவு விவகாரம்: ட்ரம்ப் – மோடி பேச்சு!

மாலத்தீவு விவகாரம்: ட்ரம்ப் – மோடி பேச்சு!

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று (பிப்ரவரி 8) இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து இருவரும் பேசியதாக, அமெரிக்காவின் வெள்ளைமாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். இதனால் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படுமென்று, இந்த தீர்ப்பினை ஏற்க மறுத்தார் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன். அவர் அதிரடியாக அவசரநிலையைப் பிரகடனம் செய்ததால், அங்குள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு நிலவும் நெருக்கடி நிலையைத் தீர்க்க, இந்தியாவின் உதவி வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் முகமது நசீத். ஆனால், மாலத்தீவின் உள்நாட்டு பிரச்சனையில் இந்தியா தலையிடக்கூடாது என்று, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது சீனா.

இந்த நிலையில், நேற்று அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மாலத்தீவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறித்து இருவரும் கவலை தெரிவித்தனர்.

“இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாலத்தீவுகளில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும், ஜனநாயக அமைப்புகளுக்கும் சட்ட விதிகளுக்கும் மதிப்பளிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் இருவரும் விவாதித்தனர்” என்று அமெரிக்காவின் வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கிவந்த நிதியுதவிகளை, தற்போது அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தலிபான் மற்றும் ஹக்கானி தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவுவதாகவும், அதனால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போரை நிறுத்த முடியவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டிவருகிறது. இந்த நிலையில், ஆப்கனிஸ்தானில் அமைதி நிலவ, இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாகச் செயல்பட வேண்டியது பற்றி இருநாட்டு தலைவர்களும் பேசினர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 9 பிப் 2018