மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

ரயில்வே தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொலை!

ரயில்வே தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொலை!

சென்னை வில்லிவாக்கத்தில் வீட்டில் இருந்த ரயில்வே தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் புதியவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னக ரயில்வே தொழிலாளர் சங்க (ஏ.ஐ.ஓ.பி.சி) பொதுச் செயலாளராக ஜே.கே.புதியவன் பணியாற்றிவந்தார். வில்லிவாக்கம் அருகே ஐசிஎப் பகுதியில் அவருடைய வீடு உள்ளது. இன்று காலை அவரது மனைவி வேலைக்கும் குழந்தை பள்ளிக்கும் சென்ற பிறகு 8.30 மணியளவில் இரண்டாவது தளத்தில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்ற இரு மர்ம நபர்கள் புதியவனைச் சரமாரியாக வெட்டித் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஐசிஎப் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் புதியவனின் கார் ஓட்டுநர் பஸ்கரன் என்பவர் மற்றொருவருடன் வந்து இந்தப் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அந்த நபர் யார், அவர் கூலிப் படையைச் சேர்ந்தவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான புதியவனின் கார் ஓட்டுநரையும் தேடிவருகின்றனர்

புதியவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உறவினர்களும் ரயில்வே தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018