மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

மெடிக்கல் த்ரில்லரில் அனுகிருஷ்ணா

மெடிக்கல் த்ரில்லரில் அனுகிருஷ்ணா

மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில், பணத்துக்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘மனுஷனா நீ’.

‘H3 சினிமாஸ்’ நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் மனுசனா நீ. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (பிப்ரவரி 8) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர், “துபாயில் பிசினஸ் செய்து வந்த நான் சினிமா மீதிருந்த நீண்ட காதலால் முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளேன். ஆனால், இதன்மூலம் பலவிதமான பிரச்னைகளையும் சிக்கல்களையும் சந்தித்துள்ளேன். தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன், வெளியீடு என எல்லாத் துறைகளில் உள்ள பிரச்னைகளையும் நேரடியாகச் சந்தித்த அனுபவம் என்னை யோசிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களை விட வெளியாகாமல் போகிற படங்கள் பல மடங்கு இருக்கின்றன. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன காரணங்கள் என்பதை நேரடியாக தன் அனுபவத்தில் கண்கூடாகக் கண்டேன். அதனால் தற்போது அவர்களுக்கு உதவும் நோக்கில், ஹெச்3 சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சிறிய படங்களுக்கும், அதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் முயற்சியாகப் பிரச்னையில் சிக்கியுள்ள படங்களை முடித்துக் கொடுப்பது, வாங்கி வெளியிடுவது, வெளியிட உதவுவது போன்ற உதவிகளைச் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டுளேன்” என்று கூறினார்.

மேலும், அதற்குத் தேவையான ஸ்டுடியோ மற்றும் சில பணிகள் முழு வீச்சில் நடக்கிறதென்று குறிப்பிட்ட இயக்குநர் அதுபற்றிய விவரமான அறிவிப்பு மனுசனா நீ பட வெளியீட்டுக்குப் பின் வெளியாகும் என்று கூறினார். “நம்பிக்கையோடு வந்தவர்களைச் சென்னையும் சரி, தமிழ் சினிமாவும் சரி என்றுமே திருப்பி அனுப்பியதில்லை என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருக்கிறேன். மனுசனா நீ எனது முதல் படம் என்றாலும், எதிர்பார்த்ததை விட ரொம்ப திருப்தியாக வந்திருக்கிறது. அந்த வகையில் ஓர் இயக்குநராக நான் சந்தோஷப்படுகிறேன். விரைவில் அந்த மகிழ்ச்சியை மக்கள் இன்னும் இரட்டிப்பாக்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஹீரோயின் அனுகிருஷ்ணா பேசும் போது, “இந்த படத்துல நான் ஹோம்லியா வில்லேஜ் கேர்ள் கேரக்டரில் நடிச்சிருக்கேன். படத்தோட ஷூட்டிங் மலேசியா, காரைக்குடி, சென்னையில நடந்தது. இந்தப் படம் ஒரு மெடிக்கல் ஃபீல்டுல நடக்குற சம்பவங்களைச் சுற்றி நடக்குற மாதிரி இருக்கும். படத்துல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் நடிக்க வேண்டியிருந்ததால் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் எடுத்தாங்க. மனிஷா என்ற மலேசிய பெண்ணும் படத்துல நடிச்சிருக்காங்க. படம் ரொம்ப சிறப்பா வந்துருக்கு” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 9 பிப் 2018