லவ்வர்ஸ் டே ட்ரீட்: விஜய் சேதுபதி


விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஜுங்கா படத்தின் பாடல் ஒன்று காதலர் தின ஸ்பெஷலாக வெளிவரவுள்ளது.
விஜய் சேதுபதி - கோகுல் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ஜுங்கா. இதே கூட்டணியில் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே கூட்டணியில் உருவாகிவரும் ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா நடித்துவருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.
சித்தார்த் விபின் இசையமைத்துவரும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துவருகிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். விஜய் சேதுபதியே தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.