மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

விவேக் ஜெயராமனுக்கு சம்மன்!

விவேக் ஜெயராமனுக்கு சம்மன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக வேண்டுமென இளவரசி மகன் விவேக் ஜெயராமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆணையத்தின் முன்பு ஆஜராகுமாறு ஜெயலலிதா அண்ணன் வாரிசுகள் தீபா, தீபக், திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன், ஜெ. உதவியாளர் பூங்குன்றன் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து அவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தோரின் பட்டியலைக் கொடுத்தால் விளக்கம் அளிப்பதாக சசிகலா தெரிவித்திருந்தார். வாக்குமூலப் பட்டியல் அவருக்கு அளிக்கப்பட்டது. வாக்குமூலம் கொடுத்தோரின் பிரமாணப் பத்திரங்களும் வேண்டும் என்று சசிகலா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென ஜெயா தொலைக்காட்சி சிஇஓவும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனுக்கு விசாரணை ஆணையம் இன்று (பிப்ரவரி 9) சம்மன் அனுப்பியுள்ளது. அவர் பிப்ரவரி 13 அல்லது 14 அன்று நேரில் ஆஜராக வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் இல்லத்தில் நீண்ட காலம் வசித்தவர் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவர் பாலாஜியும் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையம் வரும் 12ஆம் தேதி தனது விசாரணையை மீண்டும் துவங்க உள்ளது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த ஐயப்பன் ஆஜராக உள்ளார். 15ஆம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜராவார். ஆணையத்தின் புதிய செயலாளராக கோமளா நியமிக்கப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 9 பிப் 2018