நீலகிரித் தேயிலைக்கு விலை நிர்ணயம்!


நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து பச்சைத் தேயிலையை வாங்கும் ஆலைகளுக்கான விற்பனை விலையைத் தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது.
இதுகுறித்து தேயிலை மேம்பாட்டு வாரியத்தின் உதவி இயக்குநரான பி.பகலவன் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், ”வரும் பிப்ரவரி 28 வரை உற்பத்தியாளர்களிடம் வாங்கும் தேயிலை அனைத்துக்குமான விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.14 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேயிலை ஆலைகள் அனைத்தும் இப்புதிய விலையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.