மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

தமிழுக்கு வரும் கல்யாணி

தமிழுக்கு வரும் கல்யாணி

அகில் அக்கினேனி நடித்த ஹலோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகளான இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ரொமன்டிக் ஆக்‌ஷன் படமான ஹலோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அலை, யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கியிருந்தார். தற்போது கல்யாணி, ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். சுதிர் வர்மா இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் காஜல் அகர்வாலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

“கல்யாணி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இன்னும் அதிகாரபூர்வமாகக் கையெழுத்திடவில்லை. படத்தில் ஷர்வானந்தின் இள வயதுக் காதல் ஜோடியாக கல்யாணி நடிக்கிறார். வயதான பின் வரும் காதல்காட்சிகளில் காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்” என படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் ஃபர்ஸ்ட் போஸ்ட்க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். சாய் பல்லவியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள ஷர்வானந்த் அந்தப் படத்திற்குப் பின் இந்தப் படத்தின் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார்.

பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் விஜய் இயக்கத்தில் தமிழில் விரைவில் கல்யாணி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 9 பிப் 2018