இரண்டு ஆண்டுகளில் சரளமாக தமிழில் பேசுவேன்!


தமிழ் மொழியை கற்று வருவதாக தெரிவித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இரண்டு ஆண்டுகளில் சரளமாக தமிழில் பேசுவேன் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை காமராஜர் சாலையிluஉள்ள விவேகானந்தர் இல்லத்தில் கடந்த 6ஆம் தேதி விவேகானந்த நவராத்திரி விழா தொடங்கியது. பிப்ரவரி 14ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், விவேகானந்தர் இல்லத்தில் ரூ.1.30 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று (பிப்ரவரி 8) திறந்துவைத்தார்.
அனைவருக்கும் 'மாலை வணக்கம்' எனத் தமிழில் கூறி தன் பேச்சைத் தொடங்கிய பன்வாரிலால் புரோகித், “அனைவரும் சௌக்கியமா. நான் தமிழ் கற்றுவருகிறேன். தமிழ் மொழியை விரும்புகிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சரளமாகத் தமிழில் பேசுவேன்” என்று குறிப்பிட்டார்.
பின்னர், ”விவேகானந்தர் நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சகோதரி நிவேதிதா ஒரு மாத காலம் இங்கு தங்கியிருந்து பெண் விடுதலைக்கான விவேகானந்தரின் கருத்துகளை விளக்கும் பணியினை மேற்கொண்டார்” என்று அவர் தெரிவித்தார்.
விடுதலைக்குத் தூண்டுகோல்