மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

எண்ணெய் சுத்திகரிப்புத் திறன்களை மேம்படுத்தத் திட்டம்!

எண்ணெய் சுத்திகரிப்புத் திறன்களை மேம்படுத்தத் திட்டம்!

இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 2030ஆம் ஆண்டுக்குள் 77 சதவிகிதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 2030ஆம் ஆண்டுக்குள் தற்போதைய நிலையிலிருந்து 77 சதவிகிதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 439 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதனை 8.8 மில்லியன் பேரல்களாக (ஒரு நாளைக்கு) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.'

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விளங்குகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் இதன் உற்பத்தி அளவை 44 சதவிகிதம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிக்கவும் இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018