ஓய்வின்றி உழைத்த ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்!


அரசுப் பள்ளிகளில் விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 15,000 ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி, பள்ளி கல்வித்துறை சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தவும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தமிழக பள்ளிக்கல்வித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. தமிழகக் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டுப் புதிய முறை கொண்டு வரப்பட்டது. பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே இனி பதக்கமும், பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ் வழியில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மட்டுமின்றி, கனவு ஆசிரியர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.