மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

குற்றவாளிகளை அடையாளம் காண்பது எளிது!

குற்றவாளிகளை அடையாளம் காண்பது எளிது!

சீனாவில் குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக காவல் துறை அதிகாரிகள் அனைவருக்கும் அதிநவீன கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.

பேஷியல் ரிகக்னைசன் (முகத்தை அடையாளம் காணுதல்) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கண் கண்ணாடியானது கூகுள் கிளாஸ் போன்று அதிநவீனமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து, காவல் துறையினரின் சேமிக்கப்பட்ட தகவல்களுடன் அவை ஒப்பிடப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

இந்த வருடத்தின் தொடக்கம் முதல் இந்தக் கண்ணாடி காவல் துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை 7 குற்றவாளிகள் இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தொழில்நுட்பத்தை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் உபயோகப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சீனாவில் ரயில் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளுக்காக இந்தக் கண்ணாடி வழங்கப்பட்டுக் குற்றவாளிகள் தேடப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 9 பிப் 2018