மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

ஆளுநர் மாளிகையைத் தினமும் பார்வையிடலாம்!

ஆளுநர் மாளிகையைத் தினமும் பார்வையிடலாம்!

‘கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் தினந்தோறும் அனுமதி வழங்கப்படும்’ என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகை கிண்டி தேசியப் பூங்கா இருக்கும் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில் 157 ஏக்கரில் பரந்துவிரிந்த நிலப்பரப்புகளில் ஒன்றாக இருக்கும் இந்தப் பகுதியில் அரியவகை மான், தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளன.

“வழக்கமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாள்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக ஆளுநர் மாளிகை திறந்து வைக்கப்படும். ஆனால், தற்போது தினமும் ஒரு மணி நேரம் பார்வையாளர்களுக்காகத் திறந்துவைக்கப்பட உள்ளது. இன்று முதல் மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளனர். ஆளுநர் மாளிகையின் ஊழியர் வளாகம் வழியாக மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

மேலும், ஆன்லைனில் பதிவு செய்பவர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஓர் அடையாள அட்டையும், வெளிநாட்டவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட்டையும் பதிவு செய்ய வேண்டும். நுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு 25 ரூபாய் வசூலிக்கப்படும். பதிவு செய்த பிறகு மெயிலிலோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் வரும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

வனப் பகுதிகளில் உள்ள மரங்கள், பாரம்பர்யக் கட்டடங்கள், பதவியேற்பு விழா நடைபெறும் தர்பார் ஹால், குடியரசுத் தலைவர் தங்குமிடம் உள்ளிட்ட இடங்களைப் பேட்டரி கார் மூலம் பார்வையிடலாம். மேலும் போலோ மைதானத்தையும் பார்வையிடலாம் என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையிட விரும்புவோர் www.tnrajbhavan.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018