மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

மதராஸி என்று ஒதுக்கினார்கள்!

மதராஸி என்று ஒதுக்கினார்கள்!

‘பீகாரில் வசிக்கும்போது என்னையும், என் குடும்பத்தாரையும் தமிழ் குடும்பம் என்பதால், அக்கம்பக்கத்தினர் ஒதுக்கியே வைத்தார்கள்' என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

இந்தி தொடர்களில் நடித்து வந்ததோடு, மாடலிங் துறையிலும் பணிபுரிந்து வந்த மாதவனுக்கு மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ திருப்புமுனையாக அமைந்தது. அலைபாயுதே படத்துக்குப் பிறகு பல தமிழ் படங்களில் நடித்து வருவதோடு, பாலிவுட்டிலும் முக்கிய ஹீரோவாக வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது அமேசான் நிறுவனம் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் நடித்துள்ளார். ‘ப்ரீத்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தத் தொடர், ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. இதன் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாதவன் இதுவரை சொல்லாத பல ரகசியங்களை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் சென்னையைச் சேர்ந்தவன் என்றாலும், சிறு வயது முதல் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வசித்து வந்தேன். பீகாரில் வசிக்கும்போது என்னை அங்கு மதராஸி என்றுதான் அழைப்பார்கள். என்னையும், என் குடும்பத்தாரையும் தமிழ்க் குடும்பம் என்பதால், அக்கம்பக்கத்தினர் ஒதுக்கியே வைத்தார்கள்” என்று தான் ஒளித்து வைத்த ரகசியங்களை வெளிப்படுத்தினார்.

தனது 20 வயது வரை தன்னை ஒதுக்கியே வைத்ததாகக் கூறும் மாதவன், “எதற்காகத் தன்னை வேறுபடுத்திப் பார்த்தார்கள் என்று இன்று வரை தெரியவில்லை” என்றும் வருத்தத்துடன் கூறினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 9 பிப் 2018