மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் அரசுகளுக்கு ஆர்வமில்லை!

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் அரசுகளுக்கு ஆர்வமில்லை!

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்களின் சரியான காலத்தைக் கண்டறிவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆர்வமில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

செய்துங்கநல்லுரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ‘2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நான்கு கட்டங்களாக அகழாய்வு பணி நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வில், 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடும், ஏராளமான பழங்கால பொருள்களும் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அகழ்வாய்வு நடத்தவும், அருங்காட்சியகம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 1 அன்று நீதிபதிகள் கிருபாகரன், தராணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடத்திய அலுவலர் சத்தியமூர்த்தி ஆஜராகி விளக்கமளித்தார். ‘ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் தோராயமாக 4000 ஆண்டுகளுக்குப் பழைமையானவை. சரியான காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனை நடத்த வேண்டும். இந்தப் பரிசோதனை செய்வதற்குத் தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டும்’ எனக் கூறினார். இதற்கு நிதி ஒதுக்க நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018