மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

கணிதவியலாளராக மாறிய ஹிருத்திக்

கணிதவியலாளராக மாறிய ஹிருத்திக்

“ஹிருத்திக் ரோஷன் எனது சிறு வயது தோற்றத்தில் தத்ரூபமாக காட்சியளிக்கிறார்” என கணிதவியலாளர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் தற்போது அதிகளவிலான வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகிவருகின்றன. மலிவு விலையில் சானிடரி நேப்கின் தயாரித்த தமிழத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதை போல ஹிருத்திக் ரோஷன் கணிதவியலாளர் ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்று படமான சூப்பர் 30 படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்குகிறார். இந்தப் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்து ஆனந்த் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

“புகைப்படத்தை பார்த்தேன். சிறு வயதில் நான் இருந்தபடியே ஹிருத்திக்கின் தோற்றம் உள்ளது. நான் எனது மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான பயிற்சியைத் துவங்கும்போது, அதற்கான சூழலை அமைத்துக்கொடுக்கும்போது என்னிடமிருந்த பசியை ஹ்ருத்திக் கண்களில் பார்க்க முடிகிறது. அதை அவர் புரிந்துகொண்டுள்ளார். ஒரு நடிகராக அவரும் அந்தப் பசியை உணர்ந்துள்ளார். நான் ஹிருத்திக் போல் முகம் மற்றும் உருவ அமைப்பில் இல்லை. அவர் என்னைப்போன்று கடினப்பட்டு மாறியுள்ளார். அதற்காக நிறைய உழைப்பைச் செலவிட்டுள்ளார். அதற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன். இந்தப் படம் மூலம் எனது கருத்துகள் பெரியளவில் பரவும் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் கேங்ஸ்டர், நிழல் உலக தாதாக்கள் போன்ற கதைகளுக்குப் பதிலாக சமூகத்தை மாற்றும் இத்தகைய படங்கள் நிறைய வெளிவர வேண்டும் என்றும் ஆனந்த் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018