மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: இதையும் கலாய்த்து காலிசெய்து விடாதீர்கள்!

சிறப்புக் கட்டுரை: இதையும் கலாய்த்து காலிசெய்து விடாதீர்கள்!

ஹரிஹரசுதன் தங்கவேலு

மாற்றத்தைக் கொண்டுவர முனையும் எவ்வித முயற்சிக்கும் முதல்கட்ட வெற்றியே, அதற்குக் கிடைக்கும் எதிர்ப்புகளும் ஏளனங்களும்தான். ‘என்னத்த போட்டோ போட்டு, என்னத்த மாத்தி’ என இந்த ‘என்னத்த கண்ணையன்’கள் எண்ணற்ற அளவில் கிளம்பி, காரணமே இல்லாமல் எல்லாவற்றையும் பகடி செய்வார்கள். இவர்கள் கையில் இப்போது சிக்கியிருப்பது #Padman_Challenge.

‘செல்பி போட்டோ போட்டா மாறிடுமா, கைல புடிக்கிற லட்சணத்தை பாரு, லைக் பைத்தியம், லைக்குக்காக இதகூட பண்ணுவாங்களா, கிராமப்புறங்களில் இன்னும் எத்தனை எத்தனை சகோதர சகோதரிகள்! இதெல்லாம் சுற்றுச்சூழல் சீர்கேடுங்க, பேசுபூக்ல எழுதினா பேசியல் பண்ணோம்னு ஆயிடுமா... இந்த ஆண்களை நாப்கினுடன் பார்க்கவே பரிதாமாக இருக்கிறது, பட் So cute ல…’ போன்ற கமெண்டுகள்தான் பெரும்பாலும் இந்த முன்னெடுப்புக்குக் கிடைத்திருக்கின்றன.

இது எதிர்பார்த்ததுதான், இச்சமூகம் இப்படித்தான் என்பதை இந்த வியாபாரத்துக்கு வரும் முன் கணித்ததால்தான் 1984இல் உலகெங்கும் நாப்கின்கள் விற்பனைக்கு வந்தபோது Always என்ற பெயரில் வெளிவந்தது. இந்தியாவில் மட்டும் Whisper.

பரஸ்பரம் புரிந்துகொள்ள வழி உள்ளதா?

'Whisper' (கிசுகிசுப்பு) என்ற பெயருக்கேற்றபடி துண்டுச் சீட்டில் ரகசியமாக எழுதிக் கொடுத்து, மறவாமல் தினசரி பேப்பர் சுற்றி வாங்கி வருவது வரை, சமூகம் இந்த வகையறாவைக் கமுக்கமாக இன்று வரை ‘விஸ்ப’ரித்தே வாழ்கிறது. மேலை நாடுகளில் ஒரு பெண் பற்றிய புரிதலை அவள் மனரீதியாக, உடல் ரீதியாக என இருவகைகளில் அணுக Basic parenting etiquette எனத் தன் ஆண் பிள்ளைகளுக்குக் கற்று தருகிறார்கள். அப்படி வளர்க்கப்பட்ட ஆண் பிள்ளைகளும், உயர் பள்ளி இறுதி நாள் Prom night நடனத்துக்காக ஒரு பெண்ணை மரியாதையாக அணுகி, பரிசுகள் தந்து ‘ப்ரொம்போசல்’ (Like proposal, Its promposal) செய்து அவள் விருப்பத்தைக் கேட்கிறார்கள். பிறகு அந்த நாளன்று ஒரு பக்குபவட்ட ஆணாக ஆனால் சற்று அதிக பதற்றத்துடன் பெண்ணின் வீட்டுக்கே சென்று Can I take your daughter to prom tonight Mr and Mrs trump? என அவள் பெற்றோரிடமே மிக மரியாதையாகக் கேட்டு அழைத்துச் செல்கிறான். இங்கு, 'ப்ரோம் நைட் என்றாலே உடல் ரீதியான இணைதல், அது கலாசாரச் சீர்கேடு தோழர், நம் பண்பட்ட சமூகத்தில் என்றெல்லாம் கம்பு சுத்தி கமெண்ட் எழுதத் தயார் ஆகிவிடுவோம் நாம்.

நம்ம அக்கா அம்மா எல்லாம் ஏன் மாதத்தில் சில தினங்களில் வீட்டில் பின்புறத்திலேயே இருக்கிறார்கள், ஏன் தனி ப்ளேட், டம்ளர் உபயோகப்படுத்தானார்கள் எனப் புரியாத மக்கு மந்தைகளான நமக்கு ‘ப்ரோம் நைட்’தான் மனரீதியாக இரு இளம் உள்ளங்களை ஒரு Complete men ஆகவும் Caring women ஆகவும் மாற்றும் முதல் படி என்பது எப்படிப் புரியும்? இல்லை, எப்போதான் புரியும்?

துண்டுச் சீட்டு எதற்கு?

பெண் பற்றிய புரிதலின் முதல்படியாக நம் சமூகத்தில் விளைந்த ஒரு நல்ல விஷயம் இந்த Padman Challenge. இளைஞர்கள் லைக்குக்காகவோ இல்லை விழிப்புணர்வுக்காகவோ ஏதோ ஒரு காரணத்துக்காகக் கையில் Pad சகிதம் புகைப்படம் பதிவேற்றும்போது மனதின் ஓர் ஓரத்தில் நிச்சயம் அவனையறியாமல் இதைப் பற்றிய கூச்ச நாச்சங்கள் உடைபட்டு ஒரு ‘ஈஸி பீல்’ பிறக்கிறது. அடுத்த முறை அவன் வீட்டுப் பெண்கள் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தால்கூட அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, டூத் பேஸ்ட் வாங்குவது போன்ற மனநிலையில் மிக எளிதாக வாங்கி வருவான். ஊரறிய இதைச் சாதாரண பொருளாக ஒப்புக்கொள்ள வைக்கும் இந்த மாற்றத்தைத்தான் இந்த செல்பிக்கள் கொண்டுவரப் போகின்றன. இதன் மீதான ரகசியத்தை உடைத்து, அட இதான் இது என்ற புரிதலை ஏற்படுத்தும். பெண்ணிற்கான சில இயற்கைச் சங்கடங்களைப் புரிந்து நடந்துகொள்ள அடுத்த தலைமுறையை இது நிச்சயம் தயார் படுத்தும்.

இளைய சமூகத்தில் ஒரு பெண் பற்றிய மிகப்பெரும் புரிதலைத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப்போகும் ஆரம்ப கட்டம்தான் இந்த #Padman_Challenge சவால். இதையும் நாம் கலாய்த்துப் காயப்படுத்தினால் மற்ற நாடுகள் போல் சானிடரி நாப்கின்களுக்கு Always (Whisper in india), Prevail, dignity, Super girl, Royal girl என கெத்தாகப் பெயர் வைக்காமல் கடைசி வரை Whisper, Care free, Stay free, Don’t worry என கவலைகளைக் களையும் ஒரு ரகசிய சம்பவமாகவே இது தொடரும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018