மே 6இல் நீட் தேர்வு!


நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ நேற்று (பிப்ரவரி 8) அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 6ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ நேற்று அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கு இன்று முதல் வரும் மார்ச் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஓபிசி மற்றும் பொது பிரிவினர் தேர்வு விண்ணப்பக் கட்டணமாக 1,400 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் தேர்வு விண்ணப்பக் கட்டணமாக 750 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், விவரங்களை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
நீட் தேர்வுக்கான புதிய விதிமுறைகள் நேற்று மாலை 7 மணி பதிவில்[http://www.minnambalam.com/k/2018/02/08/78] வெளியிடப்பட்டது