மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

கோதுமை இறக்குமதி அதிகரிப்பு!

கோதுமை இறக்குமதி அதிகரிப்பு!

இந்தியாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோதுமை இறக்குமதி அதிகரித்துள்ளதாக புளூம்பெர்க் ஆய்வு தெரிவிக்கின்றது.

குறைந்த பயிரிடுதல் மற்றும் குறைவான மழை காரணமாக கோதுமையின் உற்பத்தியும், வரத்தும் குறைந்து அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் 3.5 மில்லியன் மெட்ரிக் டன்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக புளூம்பெர்க் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘கோதுமையைப் பொறுத்தவரை அமெரிக்காவின் இறக்குமதி 2.5 மில்லியன் டன்களாகும். இது இந்தியாவைவிடக் குறைவாகும். பொதுவாக இந்தியாவின் தேவையும் உற்பத்தியும் சமனாக இருப்பதால் இந்தியாவில் இறக்குமதி என்பது தொடர் நிகழ்வாக இருப்பதில்லை. ஆனால், தற்போது தொடர் வறட்சியின் காரணத்தினால் கோதுமையின் இறக்குமதி 5.9 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. அதிக வெயிலும், அதிக மழை இல்லாததுமே கோதுமையின் உற்பத்தி குறைவுக்கான காரணமாகும். இனிவரும் வருடங்களில், உள்நாட்டுப் பங்குகள் மற்றும் பயிர் உற்பத்தி குறைவினால் 3 முதல் 4 மில்லியன் டன்கள் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’

இந்தியாவின் அதிக அளவில் பயிரிடப்படும் குளிர்கால பயிராகிய கோதுமை 30.1 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 31.8 மில்லியன் ஹெக்டேராக இருந்தது. இதுகுறித்து விவசாய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கே.கே.சிங் பேசுகையில், “தற்போதைய பருவம் கோதுமை பயிரிடலுக்கான உகந்த பருவமாகும். பிப்ரவரி 15க்கு மேல் காலநிலையில் நல்லதொரு மாற்றம் இருப்பதால் பயிர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது” என்றும் தெரிவித்துள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 9 பிப் 2018