மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

நம்பிக்கை அளிக்கும் டிவிலியர்ஸ்

நம்பிக்கை அளிக்கும் டிவிலியர்ஸ்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ள இந்திய அணி சனிக்கிழமை நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக தொடரைக் கைப்பற்றி சாதனை படைக்கும். ஆனால், இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமையும் வகையில் ஏபி டிவிலியர்ஸ் மீதமுள்ள ஒருநாள் போட்டிகளில் இடம்பெற அணிக்குத் திரும்பவுள்ளார்.

முதல் மூன்று போட்டிகளின்போது அவரது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அவர் விளையாடவில்லை. ஆனால், நான்காவது போட்டியில் அவர் பங்கேற்பார் என முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்ற தேர்வுக்குழு சந்திப்பின் முடிவில் அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பெயர் பட்டியலை தேர்வுக்குழுவினர் வெளியிட்டனர். அதில் ஏபி டிவிலியர்ஸ் இடம்பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ஏனெனில் அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவது மட்டுமின்றி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்வார் என ஜே,பி.டுமினி கடந்த போட்டியில் நம்பிக்கை அளித்தார்.

அதேபோல் அவரது வருகைக்காக ரசிகர்கள் பெரும்பாலானோர் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், பெயர் பட்டியலில் மட்டும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் முழுவதும் குணமடையாத அவர் அணியில் விளையாடுவது போட்டி நாளன்று தெரியவரும் எனத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 9 பிப் 2018