மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

தினகரனை மத்திய அரசு முடக்குகிறதா: தமிழிசை விளக்கம்!

தினகரனை மத்திய அரசு முடக்குகிறதா: தமிழிசை விளக்கம்!

மத்திய அரசு தினகரனை முடக்குவதாகக் கூறப்படும் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘தினகரனை பாஜக போட்டியாகவே நினைக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

திருச்சியில் பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், கோட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “தமிழகத்தில் நேற்று முன்தினம் கொண்டாடிய பிறந்த நாள் விழா உலக புகழ் பெற்றுவிட்டது. கேக்கை அருவாளால் வெட்டும் ஒரே மாநிலம் தமிழகம்தான். காவல் துறையினர் அவர்களை சுற்றிவளைத்தது குறித்துப் பாராட்டுவதா அல்லது இத்தனை நாள்கள் வெளியில் நடமாட விட்டுவிட்டார்கள் என்று குறை சொல்வதா என தெரியவில்லை. அந்தளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தபோது நீட் தேர்வுக்கான பயிற்சி குறித்து பேசினேன். அப்போது அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அதிக இடங்கள் அளிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்வதாகக் கூறி, உறுதியும் அளித்தார். கேரளாவில் நீட் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் நீட் தேர்வு உள்ளது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்க்கின்றனர்.

ஆண்டாளைப் பற்றிய கருத்து தவறானது. அதை எதிர்த்து ஜீயர் உண்ணாவிரதம் இருப்பதற்கு எங்கள் ஆதரவு உண்டு. மத்திய அரசின் திட்டங்களை அனைவருக்கும் எடுத்துச் செல்வதற்காக திண்ணை பிரசாரம் செய்யவுள்ளோம். பாஜகவைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வோம். நாங்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை.

தமிழகத்தில் எங்களைப் பலப்படுத்த நாங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். மத்திய அரசு தினகரனின் சொத்துகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது தவறு. தினகரன் அதிமுக ஆட்சி தொடர ஆறு அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை நீக்கினால் ஆதரவு தருவேன் என்று குறிப்பிட்டுள்ளது அவர்களது உட்கட்சி பிரச்னை. அதில் தலையிட பாஜக விரும்பவில்லை. தினகரனைப் போட்டியாக நாங்கள் கருதவில்லை. எதற்கெடுத்தாலும் பாஜகவைக் குறை கூறுவதை அனைவரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழக பாஜகவின் தலைவர் பலம் வாய்ந்தவராக இருந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்கின்றன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018