மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சில்லறை விற்பனையில் காதி ஆடைகள்!

சில்லறை விற்பனையில் காதி ஆடைகள்!

விரைவில் காதி ஆடைகள் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என்று சிறுகுறு தொழில்களுக்கான இணையமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 6) அவர் மேலும் கூறுகையில், ”இந்தியாவில் உள்ள பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களில் இனி நமது பாரம்பரியமிக்க காதி ஆடைகள் விற்கப்படும். சென்னை, மும்பை, மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள பிக் பசார், பேண்டலூன்ஸ், குளோபஸ் போன்ற 30க்கும் மேற்பட்ட சில்லறை அங்காடிகளில் காதி பவனால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை விற்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. எனவே காதி உற்பத்தியை அதிகரிக்க 800 கிராமங்கள் காதி மயமாக்கப்படும். உற்பத்தியை அதிகரிக்கும்போது கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கிறது. காதி பொருட்கள் இனி மால்கள், மற்றும் பெரிய அங்காடிகளிலும் விற்கப்படும். மக்களிடம் இன்றும் இதற்கான மவுசு குறையவில்லை. இதன் மூலம் நமது பரம்பரிய ஆடைகள் புத்துயிர் பெறுவதோடு கிராமப்புற மக்களின் வருவாயும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 9 பிப் 2018