மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

மாநிலத் தலைவர்களுக்கு செக் வைக்கும் ராகுல்!

மாநிலத் தலைவர்களுக்கு செக் வைக்கும் ராகுல்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இதுவரை மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் வட்டாரத் தலைவர்களுக்கே அதிக முக்கியத்துவமும் அதிகாரமும் கொடுத்துவந்தனர். தற்போது இவர்களின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் புரஃபெஷனல் தலைவர்கள் பதவியைப் புதிதாக உருவாக்க உள்ளார், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

தமிழக காங்கிரஸ் தலைவராகத் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட இந்த ஒரு வருடத்தில் தங்கபாலு, சிதம்பரம், இளங்கோவன் போன்றவர்களின் எதிர்ப்பு அரசியலைத் தாங்க முடியாமல் தள்ளாடிப் போனார். கடைசியாக திருநாவுக்கரசர் பதவி பறிபோக உள்ளதாகத் தகவல் வெளியாகிய நிலையில், திருநாவுக்கரசருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கினார் ராகுல் காந்தி.

தெலங்கானா முன்னாள் அமைச்சர் பப்பி ராஜிவ் ரெட்டி தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் 527 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பட்டியலை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் திருநாவுக்கரசர். இப்பட்டியலில் குஷ்பு மற்றும் குமரி அனந்தன் பெயர் இடம்பெறவில்லை.

ஆனால், மாநிலத் தலைவர் 15 சதவிகிதம் பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளலாம் என்று கட்சி விதியுள்ளதால், அதனடிப்படையில் டெல்லி தலைமையின் ஆலோசனைப்படி குஷ்பு, குமரி அனந்தன் உட்பட 83 நியமனப் பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலை டெல்லிக்கு அனுப்பியுள்ளார்.

விரைவில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் தேர்தல் வரவுள்ளது. அப்போதே மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல்களும் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவர், “கட்சியில் மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் குறுநில மன்னர்களைப் போல செயல்பட்டுவருவதால் கட்சி சிறிது சிறிதாகத் தேய்ந்து வருகிறது. எனவே, கட்சியைப் பலப்படுத்தவும் மூத்தவர்களைப் பொறுமையாகச் சரிகட்டவும் நாடு முழுவதும் புரஃபெஷனல் தலைவர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளனர்” என்று கூறுகிறார்.

“காங்கிரஸ் கட்சி புரஃபெஷனல் அகில இந்தியத் தலைவராக ராகுல் காந்தியும், பொறுப்பாளராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிதரூர் எம்.பியும் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்துக்கு புரஃபெஷனல் காங்கிரஸ் மாநிலச் செயலாளராக மோகன் குமாரமங்கலத்தை நியமித்துள்ளார் சசிதரூர். மேலும் தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புரஃபெஷனல் தலைவர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதில் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் அதிகமாக இடம்பெற முடியாது. சீனியாரிட்டியில் உள்ள இளைஞர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். இதில் உறுப்பினராக ஆயிரம் ரூபாய் செலுத்தி படிவம் பெற வேண்டும். இவர்களை வைத்து கோஷ்டிகளை ஒழிக்கவும் முடியும். கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும் தலைவரும், புரஃபெஷனல் தலைவரும் ஒன்று சேர்ந்துதான் முடிவு செய்யமுடியும்” என்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். சுற்றுப்பயண முடிவில் நான்கு மண்டலத்திலும் மாநாடு நடத்துகிறார். இம்மாநாட்டில் ராகுல் காந்தியும் கலந்துகொள்ள இருக்கிறார்

புரஃபெஷனல் காங்கிரஸ் தலைவர் பதவியை உருவாக்கியதே தற்போதிருக்கும் தலைவர் பதவியைத் டம்மியாகத்தான் என்கிறார்கள் திருநாவுக்கரசு ஆதரவாளர்கள். திருநாவுக்கரசர் சுற்றுப்பயணத்தை காமராஜர் பிறந்த மாவட்டத்திலிருந்து தொடங்கவுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018