மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

முதுமையில் ஏற்படும் பார்வை குறைபாட்டில் ஒன்று, வெள்ளெழுத்து. இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.

முருங்கை விதை – 100 கிராம், மிளகு – 100 கிராம். இரண்டையும் நன்றாக கழுவி மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத் தட்டில் தடவி வெயிலில் வைத்தால் தட்டுச் சூடேறி எண்ணெய் கசியும். அதை வடிகட்டி பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெயில் ஒரு சொட்டு கண்ணில்விட வெள்ளெழுத்து பாதிப்புக் குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்குக் காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், காட்ராக்ட் என்பர்.

கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல் கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி பார்வை தருகிறது.

கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண்புரை நோய், 40 வயது முதல் தொடங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்களின் பவர் அடிக்கடி மாறக்கூடும்.

இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண்புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கண்புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறையைச் சொல்கிறேன்.

நம் வீட்டு அறையில் தினமும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும்.

அந்த ஒளியை தினமும் 15 நிமிடங்கள் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அந்த ஒளியில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

இது, பல பிரச்னைகளுக்குப் பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

அந்தச் சக்தி என்ன மாற்றத்தைத் தரும் என்பதை பற்றியும் கூறுகிறேன்.

1. மனக்கவலை அகலும்.

2. முடிவு எடுக்கும் திறன் மேம்படும்

3. கண்கள் புத்துணர்ச்சி பெறும்

4. நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்.

5. ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கி விடுவோம்.

6. ஒரு புதிய மனிதராகக் காணப்படுவோம்

7. ஒற்றைத்தலைவலி சரியாகும்

இதை தினமும் குறைந்தது 15 நிமிடங்களும் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்துவந்தால் பலன் அடைவது நிச்சயம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 9 பிப் 2018