மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சமன் செய்ய போராடிய சாம்பியன்ஸ்!

சமன் செய்ய போராடிய சாம்பியன்ஸ்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (பிப்ரவரி 8) கேரளா மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி 2-2 என சமனில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் சுவாரஸ்யமான காட்டத்தை எட்டியுள்ளன. அதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள மூன்று சீசனில் 2 முறை கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக திகழ்ந்து வந்தது. ஆனால் இந்த சீசன் தொடக்கம் முதல் தொடர்ந்து சொதப்பி வரும் கொல்கத்தா அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் கேரள அணி வீரர் பல்டிவ்சன் 33 ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர் ரின் டைலர் 38ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முதல் பாதியை சமன் செய்தார். அதன் தொடர்ச்சியாக இரண்டு அணிகளும் மாறி மாறி கோல் முயற்சிகளை மேற்கொண்டனர். இரண்டாவது பாதியில் கேரளா அணி வீரர் டிமிடர் 55ஆவது நிமிடத்தில் ஒருகோல் அடித்து அணியை 2-1 என முன்னிலை பெற செய்தார். அதன்பின்னர் கொல்கத்தா அணி நீண்ட நேரம் நிதானமாக விளையாடி 75 ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பினை பெற்றது. 75ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டாம் தோர்ப் ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனானது.

ஆனால் அதன் தொடர்ச்சியாக அடுத்த நிமிடமே கொல்கத்தா வீரர் பீட்டர்சனுக்கு கோல் வாய்ப்பு கிட்டியது. ஆனால் அதனை எதிரணி கோல் கீப்பர் லாவமாக தடுத்து தோல்வியைத் தவிர்த்தார்.

எனவே போட்டி 2-2 என சமனில் முடிந்தது. முதல் மூன்று சீசனில் சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா அணி இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 9 பிப் 2018