மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

நாகார்ஜுனாவை இயக்கும் தனுஷ்

நாகார்ஜுனாவை இயக்கும் தனுஷ்

தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜுனா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்கிரண், ரேவதி நடித்த ப.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை டிசம்பர் மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்தப் படத்தில் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனாவும் தனுஷும் இணையும் முதல் படமாகவும் இது இருக்கும்.

முதலில் சிரஞ்சீவியை நடிக்கவைக்கப் படக் குழு முயற்சித்துள்ளது. சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் நடித்துவருவதால் நாகார்ஜுனாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தோழா படத்தில் கார்த்தியுடன் இணைந்து நாகார்ஜுனா நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் நாகார்ஜுனா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 8 பிப் 2018