நேரடி வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு!

நேரடி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்த்ரா கூறியுள்ளார்.
தொழில் துறை அமைப்பான அசோசெம் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், "நேரடி வரிகள் அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. நாங்கள் இப்போது நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையைப் பெருமளவில் உயர்த்தியுள்ளோம். நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இப்போது 8 கோடியாக அதிகரித்துள்ளது. 15 லட்ச நிறுவனங்கள் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தில் பதிவு செய்திருந்தாலும் 7 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே ரிட்டன் தாக்கல் செய்துள்ளன" என்றார்.