மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

சிதம்பரம் வீட்டில் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் ஆவணம்?

சிதம்பரம் வீட்டில்  ஏர்செல் மேக்சிஸ் ஊழல் ஆவணம்?

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடர்பான சிபிஐயின் முக்கிய ஆவணத்தை அமலாக்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். நிதித் துறை அமைச்சகம் ஐ.என்.எஸ். மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இல்லங்களில் கடந்த ஜனவரி 13ஆம் தேதியும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். டெல்லியிலுள்ள சிதம்பரத்தின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான சிபிஐயின் ரகசிய ஆவணம் ஒன்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ. ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 8 பிப் 2018