மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தலைவா கண்ணு வேர்க்குது..: அப்டேட் குமாரு

தலைவா கண்ணு வேர்க்குது..: அப்டேட் குமாரு

சினிமாலதான் ரஜினிகாந்த் சொல்ற பஞ்ச் டயலாக் பிரபலம்னா..அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் அவர் என்ன சொன்னாலும் பஞ்ச் டயலாக்கா மாறிருது. சிஸ்டம் சரியில்லைன்னு போன மே மாசம் சொன்ன உடனே ஆறு மாசம் காலத்துக்கு ஒரு ரவுண்ட் வந்துச்சு அந்த டயலாக். அப்புறம் போன டிசம்பர்ல அவர் உதிர்த்த, எனக்கு ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு டயலாக் அதையே தூக்கி சாப்பிடுற அளவுக்கு டிரெண்ட் ஆனது. இன்னைக்கு சொன்ன தமிழ்நாட்டு சிஸ்டம் சரியில்லை டயலாக் அந்த லெவலை பீட் பண்ணும்னு எதிர்பார்க்கலாம். இந்த டயலாக்குக்கு டிவிட்டர்ல ஒவ்வொருத்தரும் உரை எழுதுறாங்க. மீம்ஸ்ல கலாய்க்குறதும் ஆரம்பமாயிருச்சு. மத்த ஹீரோக்களை விட ரஜினி காமெடி சீன்லயும் கலக்குவார்னு சொல்வாங்க. ஆனா இங்க அவரையே காமெடியனா மாத்தி கலாய்க்குறதை பார்க்கும்போதுதான் கண்ணு வேர்க்குது.

@mohanramko

எந்த செயலையும் தள்ளி போடாதீர்கள்,

குப்பைதொட்டியில் குப்பை போடும் போது கூட....

@Kozhiyaar

அலாரம் என்பது எழுப்புவதற்காக அல்ல, அணைப்பதற்காக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட கருவி!!!

@abuthahir707

இந்திய நாட்டில் எல்லா மாநிலங்களிலும் கூட தமிழை நிராகரிக்கலாம் ஆனால்

உலகத்தில் உள்ள பல நாடுகளில் ஹிந்தியை விட தமிழ் தான் அங்கு வளருகிறது என்பதை மறவாதீர்

@real_kadavul

"ஏக் ப்ளேட் பாணி பூரிஹே" அளவுக்கு ஹந்தி தெரிஞ்சா போதும், இந்தியால ஆறு நோபல் பரிசுல மூனு தமிழன்தான் வாங்கிருக்கான்.

@Ashok_Apk

முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

எந்திரன் டூ பாய்ண்ட் ஜீரோ படம் டயலாக் போல

@Ktnisha294

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பக்கோடா போடுகிறேன் என்றுக்கூறி கொண்டு பஜ்ஜி சுடுகிறார்- #தமிழிசை

நாட்ல அவன் அவன் எதை எதையோ கண்டுபிடிக்கிறான் அக்கா எத கண்டுப்பிடிச்சிருக்காங்க பாருங்க அக்காக்கு விருது குடுத்தது தப்பா?

இப்போ சொல்லுங்க மக்களே!

@mujib989898

அதிகமாக சிந்திச்சா முடி கொட்டும்னு சொல்றாங்க

ஏன் பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை

டவுட்

@CreativeTwitz

முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

// ஆமா தலைவா வாடக கேக்கானுவ

@DAnandaRaj

தமிழகத்தில் முதலில்

சிஸ்டத்தை

சரிசெய்ய வேண்டும்-ரஜினி

//ஆமா பக்கத்து வீட்டு வைபை சரியா கனெக்கட் ஆக மாட்டுது சிஸ்டம் சரி பண்ணனும்.

@Kozhiyaar

புது பேஸ்ட் எடுத்த பிறகும், பழைய பேஸ்ட்டை பிதுக்கி எடுக்க முயற்சி செய்வது நடுத்தர வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கை!!

Prabakar Kappikulam

நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 82 அரசு மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு அறிவித்துள்ள 82 அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஒன்று கூட இல்லை.

வாழ்க_ஜனநாயகம்..!

நியூட்ரினோ, அணுஉலை, ஹைட்ரோகார்பன், அனல்மின்நிலையம், வேதியியல் தொழிற்சாலைகள் மட்டுமே….

@HAJAMYDEENNKS

ட்விட்டரை விட்டு போகப்போறேன்னு சொல்றவங்களும் நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு சொல்கிற நடிகர்களும் ஒன்னுதான்...!

@Chellakutty_Dee

அக்கா ;- சக்தி இல்லாமல் சிவனில்லை

தம்பி ;- சிவனில்லாமல்

சக்தி இல்ல

அம்மா ;- இப்படியே சொல்லிகிட்டே இருந்திங்க ரெண்டு பேருக்கும் நைட்

சோறு இல்ல ஆமா

@Yasar_Tweets

குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களில் நொறுக்குத்தீனி, குளிர்பான விளம்பரங்களுக்கு தடை- மத்திய அரசு

தடை பண்ண வேண்டியது விளம்பரத்த இல்ல அந்த கார்டூன் சேனலை சந்தோஷமா ஆடி ஓடி விளையாட வேண்டிய குழந்தைகளை அடிமைபடுத்தி அவர்களின் சிந்திக்கும் திறனையும் இழக்க செய்கிறது

@Prabakar Kappikulam

தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை

- சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் பேட்டி

செய்தியாளர்கள் கேள்வி : அப்போ மத்திய அரசின் சிஸ்டம் எப்படியிருக்கு சார்..?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் : (ஆழ்ந்த தியானத்தில்…..)

கதம் கதம்

வாழ்க_ஜனநாயகம்..!

@Boopathy Murugesh

தொழிலில் தோல்வியடைந்தவர்கள் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள் - மு.க ஸ்டாலின்

உதயநிதி பேரவை சார்பில் கடும் கண்டனங்கள்..

@yugarajesh2

அரிவாள் வைத்து ரவுடிகள் கேக் வெட்டும் அளவிற்கு தமிழக நிலைமை சென்றுவிட்டது அச்சமாக உள்ளது-தமிழிசை

அட தமிழகத்தில் சாமியார்களே சோடா பாட்டில் வீசுற அளவுக்கு வளர்ந்திட்டாங்க..!!

@Boopathy Murugesh

மெரீனா பீச்சிலுள்ள நடைபாதையில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. நடைபாதை முழுவதும் தூசு. அதை துடைக்காமல் அதன் மேல் அப்படியே வர்ணம் பூசுகிறார்கள். இது சில வாரங்களில் உதிர்ந்துவிடும். பின் மீண்டும் நிதி ஒதுக்கி வேலை நடக்கும்.

இது ஒரு சிறிய உதாரணம் தான். எல்லா துறைகளிலும் இது தான் நடக்கிறது. தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் ஓடவும் இந்த மோசமான நிர்வாகம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

எங்கள் அலுவலக நடைபாதையில் இது போன்ற வேலை நடந்து பார்த்திருக்கிறேன். அவ்வளவு சுத்தமாக துடைத்துவிட்டு வர்ணம் பூசுவார்கள். அதை கண்காணிக்க ஒருவர் இருப்பார். காரணம் அது தனியார் பணம்.

இங்கும் கூட நான் கண்காணித்து அவர் அருகில் சென்று "அண்ணே கொஞ்சம் துடைச்சுட்டு அடிக்கலாம்ல" என்றேன். 'மூடிட்டு போ' என்பது போல ஒரு பார்வை பார்த்தார். அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன் இது நம்ம பணம் என்று..

@கருப்பு கருணா

திருச்செந்தூர், மதுரையை தொடர்ந்து திருவாலங்காட்டு கோவிலிலும் தீப்பிடித்துக்கொண்டதாம். பார்த்துக்கொண்டே இருங்கள்..இன்னும் வரிசையாய் பல கோவில்களில் தீப்பிடிக்கும். ஊடகங்கள் அதை ஊதிப்பெருசாக்கி விவாதமாக்கும். அந்த விவாதங்களில் வந்து உட்கார்ந்துகொண்டு, நிர்வாகம் சரியில்ல...எங்கக்கிட்ட குடுத்துடுங்கன்னு சொல்வார்கள். தொடர்ச்சியாக இதைக்கேட்கும் அப்பாவி பக்தர்கள் கரெக்ட்டுதானேன்னு சொல்வார்கள். ஒரு சுபயோக சுபதினத்தில் இந்த அரசு, அறநிலையத்துறையை கலைத்துவிடுவார்கள். எதுவும் நடக்கும் நாடு இது.

@mohanramko

மால்களில்

'ஏற இறங்க' பார்க்கிறார்கள்,

எஸ்கலேட்டரை

@madurai_jinna

பேச்சிலர்ஸின் உடம்பில்

ரத்தத்திற்கு பதில்

"டீ"யே ஓடுகிறது.!

@mohanramko

மூச்சு விட்டால் உயிர் போய் விடும்

பலூனுக்கு

@கருப்பு கருணா

காங்கிரஸ் சரியாக பணியாற்றியிருந்தால் எங்களுக்கு இந்த அளவு சுமை இருந்திருக்காது -மோடி

அவங்களும் பகோடா கடை திட்டத்தை அமுல்படுத்தியிருக்கலாம்ன்னு சொல்றீங்க...ஒங்க அளவுக்கு அவங்க யோசிக்கத்தெரியாது சார்...

ஒங்க வழி..தனி வழி...ஒருத்தனும் நெருங்க முடியாது ஜீ!

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 8 பிப் 2018