மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

டயர் வெடிப்பு: விமான சேவை பாதிப்பு!

டயர் வெடிப்பு: விமான சேவை பாதிப்பு!

சென்னை விமான நிலையத்தில் சென்னை - டெல்லி இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானம் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று ரன்வேயில் இருந்து புறப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்த நிலையில், விமானத்தின் டயர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் மேற்கொள்ளவிருந்த 199 பயணிகளை விமான நிலைய பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரபரப்புக்கிடையே எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் எரிபொருள் பற்றாக்குறையால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை ஓடுதளம் மூடப்பட்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 8 பிப் 2018