மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

முடிவுக்கு வருமா க்யூப் பிரச்சினை?

முடிவுக்கு வருமா க்யூப் பிரச்சினை?

க்யூப் நிறுவனத்திடம் வரும் 16ஆம் தேதி இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் க்யூப் (QUBE) மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமான கட்டணம் வசூலிப்பதாகத் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தை அறிவித்தது. மார்ச் 1ஆம் தேதியிலிருந்து எந்தப் படத்தையும் வெளியிடப்போவதில்லை என்று முடிவெடுத்து தமிழ், கன்னட, மலையாளத் தயாரிப்பாளர் சங்கங்களையும் அணுகித் தங்களது போராட்டத்துக்கு ஆதரவு கேட்டது. விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், சங்கரதாஸ் சுவாமிகளின் 95ஆவது குருபூஜையில் கலந்துகொண்ட நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது க்யூப் பிரச்சினை, நடிகர் சங்க கட்டடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

“சினிமா ஃபிலிம் தயாரிக்கும் நிறுவனமான க்யூப், கோலிவுட், இந்திப் படங்களுக்கு ஃபிலிம் பிரின்ட் எடுத்துக்கொடுக்க 10,000 ரூபாய் வாங்குகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்கள் ஃபிலிம் ஒரு பிரின்ட் எடுக்க 32,000 ரூபாய் வாங்குகிறது. இந்த நிறுவனத்திடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்துவிட்டோம். உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அந்த நிறுவனம், அதிகமான கட்டணம் வசூல் செய்துவருகிறது. ஆகையால், மார்ச் 1ஆம் தேதி முதல் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மாநிலப் படத் தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்திருக்கிறோம். வரும் 16ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அது தோல்வியுற்றால் பட வெளியீட்டை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

இதைத் தொடர்ந்து, ரஜினி, கமல் அரசியலில் இறங்கியிருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “காலம்தான் அவர்களுக்குப் பதில் சொல்லும்” என்று பதிலளித்தார்.

நடிகர் சங்கக் கட்டடம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது, “திருமண ஆசை எனக்கு வந்திருக்கிறது. ஏனென்றால், அப்போதுதான் சீக்கிரமே நடிகர் சங்கக் கட்டடம் விரைவில் முடியும். சினிமா நண்பர்களும் என் திருமணத்தை முன்னிட்டு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், அங்கு நடக்கும் முதல் திருமணம் என்னுடைய திருமணம்தான். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிடிமண் எடுத்து வந்து, நடிகர் சங்கக் கட்டடத்தின் முன் தூண் கட்டப்பட இருக்கிறது” என்றார் விஷால்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 8 பிப் 2018