மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

அரசுப் பணியில் அயல் மாநிலத்தார் கூடாது: முதல்வருக்குக் கடிதம்!

அரசுப் பணியில் அயல் மாநிலத்தார் கூடாது: முதல்வருக்குக் கடிதம்!

தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு முதலமைச்சரின் சென்னை இல்ல அலுவலகத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (பிப்ரவரி 8) கடிதம் அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கண் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதால், முதலமைச்சரின் தனிச் செயலாளரிடம் இந்தக் கடிதத்தை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் நேரில் அளித்தனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலத்தவர் மட்டுமின்றி, நேப்பாளம், பூட்டான், பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட வெளிநாட்டவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய அறிவிப்பின் அடிப்படையிலேயே வரும் 11.02.2018 தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில், தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் வலியுறுத்தல்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018