மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் உயர்வு!

தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் உயர்வு!

கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி மூலமான வருவாய் அதிகரித்துள்ளதாகத் தமிழ்நாடு வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரை ஜிஎஸ்டி மூலமான தமிழ்நாட்டின் வருமானம் 23,317.76 கோடியாகும். 2016 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் வாட் வரியின் மூலம் கிடைத்த வருமானத்தை விட இது அதிகமாகும். இதே காலகட்டத்தில் 2016ஆம் ஆண்டில் வாட் வரியினால் தமிழ்நாடு ஈட்டிய வருவாய் ரூ.19,017.87 கோடியாகும். இதன்மூலம் தமிழ்நாடு ஒரு உற்பத்தி நாடு என்பது மட்டுமின்றி இது ஒரு நுகர்வோருக்கான இடமுமாகும் என்றும் நிரூபணமாகியுள்ளது.

"ஜிஎஸ்டி அமல்படுத்திய ஆரம்பத்தில் உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் நுகர்வு அதிகமாக இருக்கும் என்றும் அதிக வருவாய் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்து பல மாதங்களுக்குப் பின்னர் தமிழ்நாடு ஒரு நுகர்வு மாநிலம் என்றும் சரக்குகள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான நிதி ஆதாரமாகவும் உள்ளது என்றும் தெரிய வருகிறது. ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி இழப்பீடு வருமானம் ரூ.1000 கோடியாகும்” என மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 8 பிப் 2018