மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

நீட்: தனித் தேர்வர்களுக்குத் தடை!

நீட்: தனித் தேர்வர்களுக்குத் தடை!

நீட் தேர்வு குறித்த புதிய விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள் திருத்தப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி தேர்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள், நீட் தேர்வை நடத்தும், சிபிஎஸ்இக்கு அனுப்பப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகள்

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிசம்பர் 31இல் 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது. இதில், பொதுப் பிரிவினர் தவிர, மற்ற பிரிவினர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 எனப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலைக் கல்வியான திறந்தநிலைப் பள்ளியில் படித்தவர்கள், பள்ளிக்குச் செல்லாத தனித் தேர்வர்கள் ஆகியோர் நீட் தேர்வு எழுத அனுமதியில்லை. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப் பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளைக் கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது. பொதுப் பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 45% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள், 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, 5% இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018