அதிதியை அழைக்காதது ஏன்?


பத்மாவத் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தன்னைக் கலந்து கொள்ள அழைக்காததன் காரணம் என்னவென்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகை அதிதி ராவ். பத்மாவத் படம் பார்த்த பலரும், அதிதியின் நடிப்பப் பாராட்டினார்கள். இந்த அளவுக்கு நடித்திருக்கும் இவரை ஏன் பட ரிலீஸுக்கு முன்னரே குறிப்பிடவில்லை என்றும், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி திட்டமிட்டு அதிதியை ஒதுக்கிவிட்டார் என்றும் பேசப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் அதிதி பேசியிருக்கிறார்.
பத்மாவத் படத்தில் மன்னன் அலாவுத்தீன் கில்ஜியின் மனைவி மெஹருன்னிசாவாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர் அதிதி ராவ் ஹைதரி. இந்நிலையில் படம் குறித்து Sify இணையதளப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “பத்மாவத் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்துக்காகப் பலர் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். பத்மாவத் பட செட்டில் இருந்த அனைவரும் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தனர். அனைவரின் பிரார்த்தனைதான் படத்தை வெற்றி பெறச் செய்துள்ளது. எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும். அதேபோல் படமும் அருமையாக வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.