மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

ஸ்ரேயா திருமணம்: தாயார் மறுப்பு!

ஸ்ரேயா திருமணம்: தாயார் மறுப்பு!

நடிகை ஸ்ரேயாவின் திருமணம் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்திகளுக்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவுலகில் ரஜினி, விஜய், விக்ரம், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயாவுக்கு சமீப காலமாக சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தாலும் அந்தப் படம் பெரிதாகப் பேசப்படவில்லை. அரவிந்த் சாமி ஜோடியாக நரகாசுரன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா தெலுங்கில் கவனம் செலுத்தி அங்கு பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரேயா, மாலத்தீவு டைவிங் கேம்பில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து காதல் வயப்பட்டதாகவும், நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்தச் செய்தி வதந்தி என ஸ்ரேயாவும் அவரது தாயாரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஸ்ரேயா, “நான் இன்னும் திருமணத்திற்குத் தயாராகவில்லை” என்று கூறியுள்ளார்.

ஸ்ரேயாவின் தாயார் நீராஜா கூறுகையில், “இது போன்ற எல்லாச் செய்திகளும் வதந்திதான். ஸ்ரேயா ராஜஸ்தானில் நடைபெற்ற அவரது நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்டார். அதற்காகப் புதிய உடைகளை நகைகளை வாங்கியிருந்தார். இதுதான் உண்மை. அவரது நண்பரின் திருமணம் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. அந்த திருமணத்திலும் அதனைத் தொடர்ந்து உறவினர் ஒருவரின் திருமணத்திலும் கலந்து கொள்ளவிருக்கிறார்” என்று விளக்கியிருக்கிறார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 8 பிப் 2018