மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

ஜியோவுக்குப் போட்டியாக ஃபீச்சர் போன்கள்!

ஜியோவுக்குப் போட்டியாக ஃபீச்சர் போன்கள்!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் பல முன்னணி நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திக் கடும் போட்டியாக விளங்கும் ஜியோ நிறுவனம் வெளியிட்ட ஜியோ ஃபீச்சர் மொபைல் போனுக்கு போட்டியாக பார்தி ஏர்டெல், வோடஃபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் உள்ளிட்ட நிறுவனங்கள் 4ஜி ஃபீச்சர் போன்களை தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச 4ஜி மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட இந்த மொபைல் போனை ரூ.1,500 செலுத்தி வாங்கினால் மூன்று வருடங்களுக்குப் பிறகு அத்தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் ஜியோ அறிவித்தது. இது இந்திய ஃபீச்சர் போன்கள் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்த மொபைல் போனுக்கு ரூ.49க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு வாய்ஸ்கால் இலவசம் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டது. இதனால் இதன் விற்பனை அதிகரித்தது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018