மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

மத்திய பட்ஜெட்: ஆந்திராவில் முழு அடைப்பு!

மத்திய பட்ஜெட்: ஆந்திராவில் முழு அடைப்பு!

ஆந்திர மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி அம்மாநிலம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 1ஆம் தேதி இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்துப் பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கபட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்திருந்தார். சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பாஜக தலைவர் அமித்ஷாவின் சமரசத்திற்கு பின்னால் கூட்டணியிலேயே தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திர மாநிலத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறியும் ஆந்திர மாநில இடதுசாரி கட்சிகள் இன்று (பிப்ரவரி 8) முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன. இது தொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனசேனா தொண்டர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் அமைதியாக ஈடுபட வேண்டும் என்று பவன் கல்யாண் அறிவுறுத்தினார்.

முழு அடைப்பை முன்னிட்டு, ஆந்திர போக்குவரத்துத் துறையைச் சார்ந்த 1300க்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் விசாகப்பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் சென்னை மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் சாலையை ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018