மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

கருக்கலைப்பு புகார்: மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு!

கருக்கலைப்பு புகார்: மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு!

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள் மற்றும் பாலினத்தைத் தெரிவிக்கும் ஸ்கேன் சென்டர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திருவண்ணாமலையில் கருக்கலைப்பு அதிகமாக நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய மருத்துவக் குழுவினர் அங்குள்ள ஸ்கேன் சென்டர்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வுகளில் உரிய அனுமதியின்றி கருகலைப்பு செய்வதாக ஒரு மருத்துவமனைக்கும் மற்றும் 3 ஸ்கேன் மைய அறைகளுக்கும் மத்திய மருத்துவக்குழுவினர் சீல் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மேலும் 9 மாவட்டங்களில் கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகப் எழுந்த புகாரின்பேரில், விழுப்புரம் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 9 மாவங்களிலும் உள்ள ஸ்கேன் சென்டர்களில் கருக்கலைப்பு சம்பவங்கள் நடக்கிறதா எனத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

மதுரை மாவட்டத்திலும், முறைகேடாக கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள் மற்றும் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் சென்டர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து,"மதுரை மாவட்டத்தில் உள்ள சில ஸ்கேன் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீது சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இப்புகார்களின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் ரகசியமாகக் கண்காணித்து, விசாரித்து வருகிறோம். இந்த விசாரணையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது உறுதி செய்யப்பட்டால், மருத்துவக்குழுவினருடன் சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டு, ஸ்கேன் சென்டர் மற்றும் மருத்துவமனைகளுக்குச் சீல் வைக்கப்படும்" என குமார் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று அறிய முயற்சிக்கும், கணவர் மற்றும் உறவினர்களுக்குக் குறைந்த பட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதிகபட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கச் சட்டத்தில் இடம் உள்ளது.

மேலும் பாலினத்தை தெரிவிக்கும், ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்து தகவல் தெரிந்தால் ஆட்சித்தலைவர், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனருக்கு இந்தத் தொலைப்பேசி எண் மூலம் (94449 82671) தெரிவிக்கலாம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018