மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

காலிறுதிக்குள் நுழைந்த பி.வி.சிந்து

காலிறுதிக்குள் நுழைந்த பி.வி.சிந்து

பேட்மிண்டன் ஆசியா டீம் சாம்பியன்ஷிப் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தார்.

2018ஆம் ஆண்டிற்கான பேட்மிண்டன் ஆசியா டீம் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடைபெற்றுவருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) தொடங்கி இந்தத் தொடரில் பி.வி.சிந்து தலைமையில் இந்திய அணி பங்கேற்று சிறப்பாக விளையாடிவருகிறது. இதில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தார் சிந்து.

இன்று (பிப்ரவரி 8) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஸ்வினி பொன்னாப்பா தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் பி.வி.சிந்து இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜப்பான் வீராங்கனை எமகுச்சியை 21-19, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று பிளே ஆஃப் வாய்ப்பினைத் தக்கவைத்துக்கொண்டார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018