மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

சூடான தேநீர்: அதிர்ச்சி ஆய்வு முடிவு!

சூடான தேநீர்: அதிர்ச்சி ஆய்வு முடிவு!

மது அருந்தியும், புகை பிடித்தும் இருக்கும் ஒருவர் உடனடியாகச் சூடான தேநீர் அருந்தினால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு முன்பு அமெரிக்கா மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆனல்ஸ் ஆஃப் இன்ட்ர்னல் மெடிசன்ஸ் என்ற ஆய்வறிக்கையில் சூடான அல்லது மிகவும் சூடான தேநீர் குடித்தால், உணவுக் குழாயில் இரண்டு முதல் ஐந்து மடங்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து, சீன நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஒன்பதாண்டுகளாகப் புற்றுநோய் தாக்கிய சுமார் 4.5 லட்சம் பேரிடம் ஆய்வினை மேற்கொண்டுவந்தார்கள். சுமார் ஒன்பதாண்டுகளாக நடைபெற்ற ஆய்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அந்த முடிவில் அதிக மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் உடனடியாக சூடான தேநீர் அருந்துவதினால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். இந்தப் புற்றுநோயால் இறப்பு உண்டாவதை 5 மடங்கு அதிகப்படுத்தும் எனக் கண்டறிந்துள்ளனர்.

மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் சூடாகத் தேநீர் அருந்துவதால் தொண்டைக்குழி மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும். மேலும் இவ்வகைப் புற்றுநோய் தாக்கியவர்கள் உயிர் பிழைக்கும் விகிதம் குறைவு என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

உலகின் எட்டாவது பெரிய மோசமான புற்றுநோயாக உணவுக்குழாய் புற்று நோய் பார்க்கப்படுகிறது. இந்த நோயால் ஆண்டுக்கு 4 லட்சம் பேர் உயிரிழப்பதாகச் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 8 பிப் 2018