மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

மண்டபமாக மாறும் தியேட்டர்: ஆட்சியாளர்களின் இரட்டை வேடம்!

மண்டபமாக மாறும் தியேட்டர்: ஆட்சியாளர்களின் இரட்டை வேடம்!

திருச்சி கலையரங்கம் தியேட்டர் திருமண மண்டபமாக மாற்றப்படுவது ஆட்சியாளர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று சட்டமன்ற உறுப்பினர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்திலேயே 1,417 இருக்கைகள் கொண்ட பெரிய தியேட்டரான திருச்சி கலையரங்கத்தை 2கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபமாக மாற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறுகையில், " தியேட்டரை மண்டபமாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகள் முடிவடைந்த ஆறு மாதத்திற்குள் மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தினகரன் இன்று (பிப்ரவரி 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி நகரின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த கலையரங்கம் தியேட்டர் திருமண மண்டபமாக மாற்றப்படுவது வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தியேட்டரின் வரலாறு என்பது தமிழ் கலை உலகின் பயணத்தோடு ஒன்றிணைந்தது. எம்.ஜி.ஆர் தலைமையில் ஜெயலலிதா நடத்திய கலைநிகழ்ச்சி மூலம் கலையரங்கம் கட்டுவதற்கு 1968ஆம் ஆண்டு 25லட்சம் நிதி திரட்டப்பட்டு மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிற்கு சேர்ந்தது. மேலும் பல்வேறு நாடகக் குழுக்கள் மூலம் நிதி திரட்டப்பட்ட நிதியின் மூலம் கலையரங்கம் தியேட்டர் கட்டப்பட்டு அதனை எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 1,400க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்டு பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் ஒரு காவியக் கலைக்கூடமான கலையரங்கம் தியேட்டரை திருமண மண்டபமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு. ஒருபுறம் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடிவிட்டு மற்றொரு புறம் அவர் நிர்மாணித்த கலைக் கூடத்தை மூடுவது என்பது இந்த ஆட்சியாளர்களின் இரட்டை வேடத்தையும், துரோக குணத்தையும் காட்டுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018