மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

கெடுபிடியால் 5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை!

கெடுபிடியால் 5 லட்சம்  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை!

உத்தரப் பிரதேசத்தில் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து மாணவர்கள் கண்காணிக்கப்படுவதால், காப்பி அடிக்க முடியாது என்பதால் நேற்று (பிப்ரவரி 7) ஐந்து லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் பொதுத்தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, பெற்றோர்களே மாணவர்களுக்கு பிட் எழுதிக் கொடுப்பது போன்ற மோசமான சம்பவங்கள் நடந்ததாகப் பலமுறை புகார்கள் எழுந்துள்ளன. அதனால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அம்மாநில அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும், சிறப்புப் பரிசோதகர்கள் திடீரென்று சோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கின.

கடுமையான கண்காணிப்புகளுக்கிடையே முதல் நாள் நடந்த தேர்வன்று 1.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. முதல் நாளில் நடந்த கெடுபிடிகளுக்கு பயந்து நேற்று (பிப்ரவரி 7) ஐந்து லட்சம் மாணவர்கள் வரை எழுதவில்லை.

இதுகுறித்து கல்வி துணை இயக்குநர் விகாஸ் ஸ்ரீவாஸ்தவா, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தேர்வில் காப்பி அடிப்பதைத் தவிர்க்க, முன்னெடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு, தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 8 பிப் 2018