மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பென்சில்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பென்சில்!

ஆப்பிள் நிறுவனம் காற்றில் வரையும் வசதியுடன் புதிய பென்சில் ஒன்றினை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அதன்படி காற்றில் வரைந்து கணினியில் பதிவேற்றம் செய்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிய தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனமும் புதிய தொழில்நுட்பத்தை தயாரிப்பதற்கு முன்னர் அதன் மாதிரியை வடிவமைத்து காப்புரிமை பெறுவது முக்கியமான நடைமுறையாகும். எனவே ஆப்பிள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்திற்குக் காப்புரிமை பெறச் சமீபத்தில் பதிவிட்டுள்ளது. அதில் கணினியில் உள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்களின் உதவியால் பயனர்கள் கைகளில் வைத்துள்ள இந்தப் புதிய பென்சிலைக் கண்காணித்து, அதில் பயனர்கள் எழுதும் எழுத்துக்களையும், அவர்கள் முப்பரிமாணத்தில் (3D) வரையும் படங்களையும் கணினிகளில் பதிவிட்டுக்கொள்ளும் வசதியை ஆப்பிள் நிறுவனம் பதிவிட்டுள்ளது.தொடுதிரையின் உதவியின்றி சென்சாரின் மூலம் படங்களைப் பதிவிட இந்த வசதி பயன்படும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018