மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

இறந்து போனவருக்கு வீட்டு வரி செலுத்த நோட்டீஸ்!

இறந்து போனவருக்கு வீட்டு வரி செலுத்த நோட்டீஸ்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன இந்திக் கவிஞர் மஹாதேவி வர்மாவுக்கு வீட்டு வரி செலுத்தவில்லை என அலகாபாத் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வர்மா நேரில் ஆஜராகி ரூ. 44,816 செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்து.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இந்திக் கவிஞரான மஹாதேவி வர்மா, 1987ஆம் ஆண்டு காலமானார். இவரது வீடு உள்ளிட்ட சொத்துக்கள் இவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அறக்கட்டளை ஒன்றுக்கு தானமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில்,கவிஞர் மஹாதேவி வர்மா பல ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தவில்லை என மாநகராட்சியிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.

நெவாடாவில் உள்ள வீடு இன்னும் மஹாதேவி வர்மாவின் பெயரில்தான் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தவில்லை. இது வீட்டு வரி ஏய்ப்பாகக் கருதப்படுகிறது என தலைமை வரி அலுவலர் மிஸ்ரா கூறினார்.

சொத்துகள் அறக்கட்டளை ஒன்றுக்கு மாற்றப்பட்டால், அது சம்பந்தமாகத் தகவல் அளித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அந்த வீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கும். ஆனால், எங்களுக்கு அதுகுறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என மிஸ்ரா கூறினார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018