மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

ஜி.ராமகிருஷ்ணன் பெயரில் அவதூறு: மார்க்சிஸ்ட் புகார்!

ஜி.ராமகிருஷ்ணன் பெயரில் அவதூறு: மார்க்சிஸ்ட் புகார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பெயரில் அவதூறு பரப்பப்படுவதாக அக்கட்சியின் சார்பில் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த ஜனவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் தேசியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத், "கொள்கை அளவில் காங்கிரஸும் பாஜகவும் ஒன்றுதான். எனவே வரும் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது" என்று குறிப்பிட்டிருந்தார். இது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரகாஷ் கரத்தை விமர்சனம் செய்யும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்ததாக புதிய தலைமுறை லோகோவுடன் சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டது. இதையடுத்து இதற்கு உடனே எதிர்வினையாற்றிய புதிய தலைமுறை தொலைக்காட்சி, "புதிய தலைமுறையின் பெயரை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் உண்மைக்கு மாறான கருத்துகள் பரப்பப்படுவதை புதிய தலைமுறை வன்மையாக கண்டிக்கிறது. சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குறித்து பரப்பப்படும் போலி செய்தி தொடர்பாகக் காவல்துறையில் அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், இதுபோன்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் பொய்யான பதிவுகளைத் தடுக்கவும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018