மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

ஆட்சியர், தாசில்தார் நேரில் ஆஜராக உத்தரவு!

ஆட்சியர், தாசில்தார் நேரில் ஆஜராக உத்தரவு!

திண்டுக்கல் நீலமலைக்கோட்டையில் தென்னை மரங்களை வெட்டத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், பெரும்பாலான அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற ஏன் தயங்குகின்றனர் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நீலமலைக்கோட்டையில் தென்னை மரங்களை வெட்டத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தென்னை மரம் வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது,அரசு வழக்கறிஞர் ஆஜராகி, நீர்வழிப் பாதையின் மையப் பகுதியில் இருந்ததால் தென்னை மரங்களை வெட்டியதாகத் தெரிவித்தார்.அப்போது நீதிபதிகள், தங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றனர்.

தென்னை மரங்களை வெட்டக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தும், மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் நாளை (பிப்ரவரி 9) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

பெரும்பாலான அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றத் தயங்குகிறார்கள். எதற்காக, அந்த தயக்கம் என புரியவில்லை என நீதிபதிகள் கூறினர். நன்னெறியில் வராத பணம் கேடான வழியில் சென்றுவிடும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதிகாரிகள் நியாயமாகப் பணியாற்ற வேண்டும் என்றார்கள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 8 பிப் 2018