மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு பீட்டா கடிதம்!

ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு பீட்டா கடிதம்!

ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் வழக்குகள் தொடர்ந்ததால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்துக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. இதன் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்குச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போட்டி எவ்வித தடையும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது. அலங்காநல்லூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர், துணை முதல்வர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டைத் துவக்கி வைத்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு நேற்று (பிப்ரவரி 8) கடிதம் எழுதியுள்ளது. அதில், "கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 43 வீரா்கள் உயிரிழந்துள்ளனர், 4 காளைகளும் உயிரிழந்துள்ளன. போட்டியில் பங்குபெற்ற 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "அனைத்து மாநிலங்களிலும் விலங்குகள் நல வாரியம் இருந்தும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற சட்ட விரோத போட்டிகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே உயிர்களைக் கொன்றது போதும், உயிர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இனிமேலாவது கலாச்சாரத்தை விட மனித உயிர்கள் பெரிது என்பதை உணர்ந்து ஜல்லிக்கட்டைத் தடைசெய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை பீட்டா அமைப்பின் தலைவர் நிகுஞ்ச் சர்மா எழுதியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 8 பிப் 2018