மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

நீட் தேர்வால் இட ஒதுக்கீடு தடைப்படுகிறது!

நீட் தேர்வால் இட ஒதுக்கீடு தடைப்படுகிறது!

நீட் தேர்வு காரணமாக இட ஒதுக்கீடு தடைப்படுவதாக நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, இந்திய அரசியலமைப்பில் முதல் திருத்தத்தைக் கொண்டுவந்தது தமிழகம்தான் என்றும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி நேற்று (பிப்ரவரி 7) நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது, “தமிழகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தண்ணீருக்காகப் போராடி வருகின்றனர். காவிரி தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பின்பற்றப்பட்ட சமூக நீதியின் வரலாற்றையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். நீதிக்கட்சி காலத்தில் இருந்து பின்பற்றப்பட்ட சமூக நீதி காரணமாக ஏராளமான மக்கள் பயனடைந்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான பிறகு இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் காரணமாகவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 8 பிப் 2018