மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

முதலீடு - உள்நாட்டு உற்பத்தி உயரும்!

முதலீடு - உள்நாட்டு உற்பத்தி உயரும்!

முதலீடு - உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதாச்சாரம் உயரும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

பிசினஸ் லைன் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "முதலீடு-உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரம் உயரும் என்று கருதுகிறேன். அதற்கான தெளிவான அறிகுறிகளும் நமக்குத் தென்படுகிறது. கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலகட்டம் தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரித்தால் ஜிடிபி உயரும்.

கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டுப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை நிர்ணயித்தல் பிரச்னை தான் இதில் முக்கியப் பங்காற்றியது. உள்நாட்டுக் காரணிகளை சரிசெய்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். நிதி மூலதனத்தில் இன்று போட்டிகள் நிறைந்துள்ளது. தற்போது நிதிப் பற்றாக்குறை 3 சதவிகிதமாக உள்ளது. பணவீக்கம் குறைந்தால் இது மேலும் அதிகரிக்கும். நிதி நிலைகள் 2014ஆம் ஆண்டிலிருந்து இறங்குமுகமாகவே உள்ளது. நாணயக் கொள்கைகள் பணவீக்கம் குறித்த சிக்கல்களுக்கு தீர்வளிக்கும்" என்றார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 8 பிப் 2018