மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

கோவில் இடத்தில் அரசு அலுவலகமா?

கோவில் இடத்தில் அரசு அலுவலகமா?

அரசு நிலத்தில் உள்ள பாளையத்தம்மன் கோவிலை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோவில் இடத்தில் அரசு அலுவலகங்கள் இருக்கலாமா என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ரிசர்வ் வங்கி மற்றும் தலைமை அலுவலகத்துக்கு எதிரே கோட்டை பாளையத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. எனவே, கோயிலை இடித்து நிலத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு அரசின் சார்பில் கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் கோயிலை இடிக்கத் தடை விதிக்கக் கோரி கோயில் பூசாரி குருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 6ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள், "எந்தக் கடவுளும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயில் கட்டச் சொல்வதில்லை. உண்மையான கடவுள் பக்தியுள்ளவர்கள் இடிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயிலைக் கட்டமாட்டார்கள்" என்று குறிப்பிட்டனர். மேலும் பூசாரியின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், கோவிலை இடிக்கவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்வினையாற்றிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று (பிப்ரவரி 8) தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு இடத்தில் உள்ள கோவில்கள் இடிக்கப்படும் என்றால் கோவில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு ட்விட்டில் அரசு இடத்தில், சாலை மத்தியில் உள்ள அனைத்து சிலைகளும் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018